அமித்ஷாவின் கருணைப் பார்வை கிடைத்தது… உற்சாகத்தில் சசி உறவினர்கள்!

  0
  3
  sasikala

  சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் உள்ளார். தண்டனைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அவர் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாக சசிகலா மீது உள்ள பல்வேறு பொருளாதார வழக்குகள் தூசு தட்டப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும்…

  திவாகரன் மகன் திருமணத்துக்கு அமித்ஷா வாழ்த்து கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம் சசிகலா குடும்பத்துக்கு அமித்ஷாவின் கருணைப் பார்வை கிடைத்துவிட்டது, இனி அவர் எளிதில் வெளியே வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
  சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் உள்ளார். தண்டனைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அவர் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாக சசிகலா மீது உள்ள பல்வேறு பொருளாதார வழக்குகள் தூசு தட்டப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும்… இதன் மூலம் சசிகலா தற்போது வெளியே வர முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர்.

  amit shah

  ஆனால், திவாகரன் மகன் ஜெயானந்த் திருமணத்துக்கு அமித்ஷா வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருப்பது, அவருக்கு சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான கோபம் போய்விட்டது என்பதையே காட்டுகின்றது என்று அடித்து சத்தியம் செய்து கூறுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.
  சசிகலா மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் எளிதில் உடைத்தெறியப்படும். சில வழக்குகள் இன்னும் நீதிமன்ற படியே ஏறவில்லை. தண்டனை வழங்கும் வாய்ப்புள்ள வழக்குகளை வாய்தா கேட்டே இழுத்தடிக்க முடியும் அதனால், சின்னம்மா சிறையிலிருந்து வெளியே வருவதில் எந்த பாதிப்பும் இல்லை என்கின்றனர்.
  சசிகலாவின் ஆதிக்கத்தை ஒடுக்க தமிழக பா.ஜ.க கொடுத்த அழுத்தம் காரணமாக சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது சசிகலா ரூ.2000ம் கோடி அளவுக்கு பினாமி சொத்து சேர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மூலமாக ரூ.140 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுக்களை சசிகலா மாற்றினார் என்று கூறப்படுகிறது. இவை எல்லாம்தான் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பா.ஜ.க-வுக்கு கட்டுப்பட்டு நடக்க காரணம் என்று கூறப்படுகிறது.

  amitshah

  1991-96 வரையிலான காலகட்டத்தில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்குகள் இன்னும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கே முடிவடையாத நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ரூ.2000 கோடி பினாமி சொத்து வழக்கு எப்போது முடிந்து எப்போது சசிகலாவுக்கு தண்டனை கிடைக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும், பினாமி சொத்து வழக்கில் பினாமிகள் என்று கூறப்படுபவர்கள் யாரும் நாங்கள் சசிகலாவை பார்த்தோம், அவருடன் பேசினோம் என்று வாக்குமூலம் அளிக்கவில்லையாம். இந்த ஒரு விஷயத்தை வைத்தே ஈஸியாக சசிகலா வழக்கை உடைத்துவிடுவார் என்று கூறுகின்றனர்.
  அடுத்தது சசிகலா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டு. அந்த வழக்கு இன்னும் நீதிமன்ற படியே ஏறவில்லை… அதை வைத்து எல்லாம் சசிகலாவை சிறையில் அடைக்க முடியாது. அதனால் விரைவில் சசிகலா வெளியே வருகிறார்… அமித்ஷாவின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டதால் எடப்பாடி உள்ளிட்டவர்கள் ஆட்டோமெட்டிக்காக சசிகலா பக்கம் வந்து சேர்வார்கள் என்று உற்சாகமாக கூறுகின்றனர் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.