அமிதாப்பின் ஜுந்த்! – டீசர் வெளியானது… படம் மே 8ல் ரிலீஸ்

  0
  2
  jhund movie

  இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் டீசர் வெளியானது. படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அமிதாப் பச்சன் நடிப்பில், பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ஜுந்த் என்ற படம் தயாராகி வருகிறது. இதன் முதல் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இன்று படத்தின் டீசர் வெளியானது. அதில், மிரட்டலான பின்னணி இசையோடு இளைஞர்கள், சிறுவர்கள் கையில் கிரிக்கெட் பேட், உருட்டுக்கட்டை, சங்கிலி என ஆயுதங்களுடன் நடக்கின்றனர். அமிதாப்பச்சனின் மந்திர குரல் ஒலிக்கிறது.

  இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் டீசர் வெளியானது. படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
  அமிதாப் பச்சன் நடிப்பில், பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ஜுந்த் என்ற படம் தயாராகி வருகிறது. இதன் முதல் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இன்று படத்தின் டீசர் வெளியானது. அதில், மிரட்டலான பின்னணி இசையோடு இளைஞர்கள், சிறுவர்கள் கையில் கிரிக்கெட் பேட், உருட்டுக்கட்டை, சங்கிலி என ஆயுதங்களுடன் நடக்கின்றனர். அமிதாப்பச்சனின் மந்திர குரல் ஒலிக்கிறது.

  movie

  இறுதியில் படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். டீசர் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே யூடியூபில் அதை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். சோஷியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.
  இந்தப்படத்தை டி சீரிஸ் சார்பில் பூஷண்குமார் மற்றும் கிரிஷன் குமார், ராஜ் ஹிரீமத், சவிதா ராய் ஹிரீமத், நாக்ராஜ் மஞ்சுலே ஆகியோர் தயாரிக்கின்றனர். பினுத் பிரதான் ஒளிப்பதிவு செய்கிறார். அஜய் அதுல், சச்சட் பரம்பரா, விஷால் மிர்ஸா ஆகியோர் இசையமைக்கின்றனர்.