‘அப்ப சொந்த வீடு கூட இல்ல’.. ‘இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்!’.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

  0
  1
  மாதிரி படம்

  ‘அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்கிற பழமொழி எல்லாம் நிஜம் தான். ஆனால் அப்படி அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பதற்கு கொஞ்சம் உழைப்பும் அவசியம் என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறது தனித் தீவுக்கு திடீர் சொந்தக்காரரான இந்த இளைஞரின் வாழ்க்கை.

  ‘அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்கிற பழமொழி எல்லாம் நிஜம் தான். ஆனால் அப்படி அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பதற்கு கொஞ்சம் உழைப்பும் அவசியம் என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறது தனித் தீவுக்கு திடீர் சொந்தக்காரரான இந்த இளைஞரின் வாழ்க்கை.

  lopez

  இருப்பதற்கு சொந்தமாகி ஊசிமுனை அளவு கூட இடம் கிடையாது. வீடு மாறுவதே பல வருஷங்களுக்கு வாழ்க்கையாக கடந்து போனது. துபாயில் தற்சமயம் வசித்து வரும் இந்திய வம்சாவளியான லோப்பஸ் என்கிற இளைஞருக்கு தான் அப்படி திடீர் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. என்பிடி என்ற நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் இவர் இயக்கிய குறும்படம் முதல் பரிசைப் பெறுவதற்கு தேர்வானது. முதல் பரிசு தொகையாக அவருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் பரிசாகக் கிடைத்தது. இதோடு நின்றிருந்தால் அவரது உழைப்பும், விடா முயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக மட்டுமே இருந்திருக்கும். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு திடீரென்று இன்னொரு பெரும் பரிசும் கிடைத்தது.

  island

  கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே உள்ள ஹால்பாயிண்ட் தீவினை குறும்படத்தைப் பார்த்து நெகிழ்ந்த பரிசுக் குழுவினர் லோப்பஸ்க்கு திடீர் பரிசாக அளித்துள்ளனர். சுமார் 5 கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவு கொண்ட இவ்வளவு பெரிய தீவு ஒன்றை தனக்கு பரிசாக கிடைத்தது குறித்து திக்குமுக்காடிப் போயிருக்கிறார் லோப்பஸ். இத்தனை வருஷமா எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. இப்போது இவ்வளவு பெரிய தீவுக்கு உரிமையாளரானதை என்னால் நம்ப முடியவில்லை. என் பெற்றோருடன் அந்தத் தீவில் வசிக்க விரும்புகிறேன் என்று மேலும் நெகிழ்ந்திருக்கிறார் லோப்பஸ்.