அப்ப உங்க பேர் சன்னி தியோல் இல்லையா; கதறும் பாஜக?!..

  0
  2
  சன்னி தியோல் - மோடி

  பாஜக சார்பாக ஹேம மாலினி, ஜெயப் பிரதா, சன்னி தியோல் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சன்னி தியோலின் உண்மையான பெயரால் பாஜக பதட்டத்தில் உள்ளது.

  பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாஜக வேட்பாளராக குர்தாஸ்பூரில் (பஞ்சாப்) போட்டியிடுகிறார். அவரது உண்மையான பெயரால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  sun

  திரையுலக பிரபலங்களை வேட்பாளராக அறிவிப்பது பேஷனாகி விட்டது. இதற்கு பெரும்பான்மையான கட்சிகள் விதிவிலக்கல்ல, நடிகர்களின் பிரபலத்தன்மையை பயன்படுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என நம்புகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக ஹேம மாலினி, ஜெயப் பிரதா, சன்னி தியோல் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சன்னி தியோலின் உண்மையான பெயரால் பாஜக பதட்டத்தில் உள்ளது.

  sff

  பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதியின் வேட்பாளராக சன்னி தியோலை அறிவித்துள்ளது பாஜக. அவரது உண்மையான பெயர் அஜய் சிங் தர்மேந்திரா தியோல். குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திரத்தில் இவரது உண்மையான பெயர்தான் தோன்றும்.

  அஜய் சிங் என்ற பெயர் யாரென தெரியாமல் குழப்பம் ஏற்பட்டு வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது என பாஜக தரப்பு பதட்டத்தில் இருக்கிறது. ஆனால் வேறு பெயரை பயன்படுத்திக்கொள்ள சில விதிகள் இருக்கிறது. அதனால் பாஜக கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளது. ஒருவேளை சன்னி தியோல் என்ற பெயரை பயன்படுத்த முடியாமல் போனால், பாஜக பின்னடைவை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நேற்று முதல் சன்னி தியோல் தன் பிரசார வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.