அப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க?

  0
  5
  Rahul Gandhi

  நாடாளுமன்ற தேர்தலில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைக்கூட பெற முடியாமல் துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகவேண்டும் என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புக்குரல் கிளம்பி இருக்கிறது.

  Ramachandra Guha

  தேர்தல் தோல்வி குறித்து அலசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு நாளை டெல்லியில் கூடி விவாதிக்க இருக்கிறது. இதற்கிடையில், தாமாக விலகிவிட்டால் கவுரவம் என கருதும் ராகுல், முன்கூட்டியே ராஜினாமா முடிவோடுதான் கூட்டத்திற்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Yogendra Yadav

  வரலாற்று ஆசிரியரும், முன்னாள் பிரதமர் நேருவின் ஆதரவாளருமான ராமச்சந்திர குகா, ‘ராகுல் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது பேராச்சர்யத்தை ஏற்படுத்துகிறது’ என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளார். கருத்துகணிப்புகள் பாஜகதான் வெற்றிபெறும் என்ற தகவல்கள் வெளியானபோதே, காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதவேண்டும் என்று பிரபல தேர்தல் நிபுணர் யோகேந்திர யாதவ்வும் கருத்து தெரிவித்திருந்தார். கட்சிக்கு வெளியே இருந்து மட்டுமல்ல, கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த தோல்விக்கு ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். நாளை ராகுலுக்கு மற்றுமொரு நாளா அல்லது????