‘அப்பாவுக்கு கோவில்’ கட்டி கும்பாபிஷேகம் செய்த ‘பிக் பாஸ்’ சரவணன்: பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு!

  0
  7
  பிக் பாஸ் பிரபலங்கள்

  தனது உறவினர்கள் தன்னிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் தன்னை மதிக்கவில்லை என்று கூறி அழுது தீர்த்தார். 

  பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார். 

  bb

  பெண்களை  உரசுவதற்காகவே  பேருந்தில் சென்றுள்ளேன் என்று கூறியதால்  பிக் பாஸ் வீட்டிலிருந்து  அதிரடியாக வெளியேற்றப்பட்டவர்  நடிகர் சரவணன். இவர்  ஒரு எபிசோடில், தன் வாழ்வின் கடினமான பாதையை கடந்துவந்ததை உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார். தனது உறவினர்கள் தன்னிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் தன்னை மதிக்கவில்லை என்று கூறி அழுது தீர்த்தார். 

  bb

  இந்நிலையில்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அளிக்கப்பட்ட பணத்தில் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்காடு கிராமத்தில் கோவில் கட்டியுள்ளார்.  அக்கோவிலில் விநாயகர், வீரமுனி  சிலைகளுடன் சேர்த்து போலீசாக இருந்த தனது அப்பாவுக்கும் சிலை வைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளார் நடிகர் சரவணன். 

   

  இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சாண்டி, மீரா மிதுன், தர்ஷன், ரித்விகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.