அபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி! 

  0
  1
  Rowdy

  சென்னையில் மர்ம நபர் ஒருவர் அபார்ட்மெண்டிற்குள் ஆடையில்லாமல் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னையில் மர்ம நபர் ஒருவர் அபார்ட்மெண்டிற்குள் ஆடையில்லாமல் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னை தியாகராய நகரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் இரவு திடீரென அரைகுறை ஆடையில் நுழைந்த ஒரு மர்ம நபர் நுழைந்து கார் கண்ணாடிகள், வீட்டு ஜன்னல்கள் ஆகியவற்றை உடைத்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அப்பார்ட்மெண்ட் காவலாளி உடனடியாக மர்ம நபரை பிடிக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த காவல்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அந்த நபர் காவல் அதிகாரி சுந்தரமூர்த்தியின் கட்டை விரலை கடித்துள்ளார். உடனிருந்த காவல்துறையினர் அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அந்த நபர் அசாமை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் பல்வாதுர் என்றும் தெரியவந்தது. அவருடைய மனைவி இறந்த பிறகு சென்னைக்கு பிழைக்க வந்து விட்டதாகவும் பல்வாதுர் காவலர்களிடம் கூறியுள்ளார்.