அன்புமணி மீது இத்தனை வழக்குகளா? வேட்புமனு தாக்கலின் போது வெளியான உண்மை!?

  0
  1
  அன்புமணி ராமதாஸ்

  அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு விவரங்கள் தருமபுரி தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் வெளியாகியுள்ளது. 

  தருமபுரி: அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு விவரங்கள் தருமபுரி தொகுதிக்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் வெளியாகியுள்ளது. 

  அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி

  admk pmk

  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனச் சொல்லிவந்த பாட்டாளி மக்கள் கட்சி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அன்புமணி அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ரீதியில் விமர்சனங்களைக் கடந்தார். தற்போது மீண்டும் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார் அன்புமணி. 

  அன்புமணி  மீதான வழக்குகள்

  ANBUMANI TTN

  இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதில் தான் விஷயமே உள்ளது. பொதுவாக வேட்புமனு தாக்கலில் சொத்து விவரங்கள், வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள், குற்ற விவரங்கள் தாக்கல் செய்யப்படும். அப்படி அன்புமணி செய்த, வேட்புமனு தாக்கலில் அவர் மீதான வழக்குகள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. 

  அதன் விவரங்கள் பின்வருமாறு:

  • மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு வழக்கு 
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகப் பேசியதாக  மாமல்லபுரத்தில் வழக்குகள்.
  •  2010ஆம் ஆண்டில் அனுமதியின்றி கூட்டம் கூடியது மற்றும் தரக்குறைவாகப் பேசியது தொடர்பாகத் தருமபுரி இந்தூர் பகுதியில் வழக்கு.
  • இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாகத்  தருமபுரி காவல் நிலையத்தில் வழக்கு.
  • சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், அன்புமணி மீது அவதூறு வழக்கு
  • டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி, போராட்டம் நடத்தியதால், கே.கே.நகர் காவல் நிலையத்தில்  வழக்கு 
  • சட்டம் ஒழுங்கை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திலும், வழக்கு 
  • காவிரி விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தியதாகச் சென்னை  எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு

  இதில் அன்புமணி  மீதான பல்வேறு வழக்குகள் தருமபுரியில் பதியப்பட்டுள்ளதாகவே இருக்கின்றன. பா.ம.க இளைஞரணி தலைவராக சுறுசுறுப்பாக இயங்கி வரும் அன்புமணி மீது இத்தனை  வழக்குகள் இருப்பது பா.ம.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

   

  மேலும் படிக்க: பண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு?!