அன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..? மு.க.ஸ்டாலினுக்கு சவால்..!

  0
  4
  அன்புமணி

  அன்புமணியுடன் அரைமணி நேரம் உளறாமல் ஸ்டாலின் பேசினால் தான் திமுகவில் இணைந்து விடுவதாக அதிமுக பிரமுகர் கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.

  அன்புமணியுடன் அரைமணி நேரம் உளறாமல் ஸ்டாலின் பேசினால் தான் திமுகவில் இணைந்து விடுவதாக அதிமுக பிரமுகர் கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.

  Anbumani

  இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ’’5 மாதம் முன்னர் கூட நநான்காவது முறையாக நேரடி விவாதத்திற்கு அழைத்தார் அன்புமணி இராமதாஸ். அப்போவெல்லாம் சப்பை கட்டு கட்டிட்டு தனது கட்சியிலிருக்கும் வன்னியர் தலைவர்கள் விட்டு பதில் அறிக்கை விட்டுட்டு , இப்போ வந்து பகிரங்கச் சவாலாம் , இல்லைனா அன்புமணி அரசியலிலிருந்து ஒதுங்கனுமாம் .

  Anbumani

  அந்த மனுஷன் கூட அரைமணி நேரம் பேசிட்டு  உளறாமல் அசிங்கப்படாம வந்துடுங்க. நான் உங்க கட்சியில் இணைஞ்சிடுறேன்.  நம்மிடம் கேள்வி கேட்கும் அளவிற்கு இவர்களுக்கு துணிச்சல் வந்து விட்டது … ஊடகத்தை நாம் கவனமாக கையாள வேண்டும் என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.

  Anbumani

  ஒவ்வொரு ஊடக நிறுவனத்திலும் தங்களுக்குச் சாதகமான அல்லக்கைகளை நுழைத்து தங்களுக்குத் தேவையான செய்திகளை திணித்து , ஒரு புல்தடுக்கி பயில்வானை ஆகச் சிறந்த செயல் தலைவர் , தளபதி என்று நிர்மாணித்து , மக்களை எல்லாம் முட்டாளாக்கிட முயற்சிப்பது என்பதாகிவிட்ட நிலையில் , மக்கள் மனதில் எதார்த்தமாக எழும் கேள்விகளை கேட்கும் நபர்கள் அசச்சுறுத்தல்களாகத்தானே தெரிவார்கள் ? 

  ஒரு கேள்விக்கே இவ்வளவு திணறுறீங்களே , இன்னும் பல கேள்விகள் லைன் கட்டி வர போகின்றன , பல ரூபங்களில், அதுக்கெல்லாம் என்ன செய்யப் போறீங்க ? வழக்கம் போல கைக்கூலிகளை வைத்து எதிர்வினை என்பது இனி எடுபடாது … இன்னும் நிறைய இருக்கு’’ என கிஷோர் கே.சுவாமி தெரிவித்துள்ளார்.