அனைத்து ஸ்கிரீனிலும் பிகில் மட்டும்! ரோஹினி தியேட்டர் நிர்வாகம் அதிரடி!! 

  0
  2
  BIGIL

  பிகில் படம் வெளியாகும் தினத்தன்று அனைத்து ஸ்கிரீனிலும் பிகில் படம் மட்டுமே திரையிடப்படும் என்று ரோஹினி திரையரங்கத்தின் நிர்வாக இயக்குநர் ரேவந்த் சரண் தெரிவித்துள்ளார்.

  பிகில் படம் வெளியாகும் தினத்தன்று அனைத்து ஸ்கிரீனிலும் பிகில் படம் மட்டுமே திரையிடப்படும் என்று ரோஹினி திரையரங்கத்தின் நிர்வாக இயக்குநர் ரேவந்த் சரண் தெரிவித்துள்ளார்.

  இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. கார்த்தி நடித்த் கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் மற்றும்  இளைய தளபதி விஜய் நடித்த பிகில் ஆகிய மூன்று படங்கள் தீபாவளி ரேசில் உள்ளன. இந்த மூன்று படங்களில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் பிகில். அதனால் அதிக தியேட்டர்கள் பிகில் படத்திற்குதான் கிடைக்க வாய்ப்புள்ளது.

  bigil

  இந்நிலையில் சென்னையிலுள்ள பிரபல திரையரங்கமான ரோஹினி திரையரங்க நிர்வாக இயக்குநர் அவரது ட்விட்டர் பக்கத்தில், பிகில் வெளியான ஒருவாரத்திற்கு ரோஹினி தியேட்டரில் பிகில் மட்டுமே திரையிடப்படும் என தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் 6 ஸ்கீரின்களும், ஆவடியிலுள்ள அனைத்து ஸ்கீரின்களிலும், திண்டிவனத்திலுள்ள ரோஹினியின் அனைத்து ஸ்கீரின்களிலும் பிகில் படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளார்.