அனைத்து மதுபான பார்களையும் மூட வேண்டும் : கேரள முதல்வர் அதிரடி உத்தரவு !

  0
  1
  bar

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்க படாததால், இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

  ttn

  மேலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது. கேரளாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கேரளா அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . அதன் படி கேரளாவில் உள்ள அனைத்து மதுபான பார்களையும் மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,  குளிர்பான கடைகளில் சட்ட விரோதமாக விற்கப்பட வாய்ப்பு உள்ளதால், குளிர்பான கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளார்.