அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கீரைகளின் ராணி… முருங்கைக்கீரை

  0
  12
  முருங்கைக்கீரை

  சத்தான உணவுப் பொருட்களையே தருகிறோம் என்று வாரத்தில் ஒரு நாள் கீரையை சமைக்கிறோம். ஆனால், இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பேர் வாராவாரம் வெவ்வேறு கீரை வகைகளைச் சமையலில் பயன்படுத்துகிறீர்கள்… நான் என்று மனசுக்குள்ளேயே சொல்லிக் கொள்பவர்களுக்கு சபாஷ்.

  சத்தான உணவுப் பொருட்களையே தருகிறோம் என்று வாரத்தில் ஒரு நாள் கீரையை சமைக்கிறோம். ஆனால், இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பேர் வாராவாரம் வெவ்வேறு கீரை வகைகளைச் சமையலில் பயன்படுத்துகிறீர்கள்… நான் என்று மனசுக்குள்ளேயே சொல்லிக் கொள்பவர்களுக்கு சபாஷ்.

  drumstick leaf

  ஒரே விதமான கீரையையே தொடர்ந்து சமையலில் பயன்படுத்துவதால் பெரிதாக ஒரு பயனும் கிடையாது. எல்லா வகையான கீரையையும் பயன்படுத்த வேண்டும். கீரைகளில் முருங்கைக்கீரையைத் தான் கீரைகளின் ராணி என்கிறார்கள். இந்தியா முழுவதும் பரவலாக முருங்கை மரத்தைக் காணலாம். விதைப் போட்டால் தான் வளருவேன் என்று அடம்பிடிக்கிற ரகமெல்லாம் கிடையாது. தவிர, வீட்டுத்தோட்டத்திலோ வீட்டின் முன்பக்கம் அல்லது பின்பக்கத்திலோ, மொட்டை மாடியிலோ எளிதாக நாம் வளர்க்கலாம். முருங்கையின் கிளையை ஒடித்து வைத்தாலே துளிர் விட்டு வளரத் தொடங்கி விடும். முருங்கைமரத்தின் இலை, பூ, காய் என்று அனைத்தையுமே சமையலில் பயன்படுத்தலாம். 

  drumstick leaf

  கீரையாய் சமைக்கா விட்டாலும், முருங்கை இலையைப் பறித்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் வைக்கும் சாம்பாரில், இரண்டு ஸ்பூன் இந்தப் பொடியைத் தூவி, பின் தாளித்தால் எழுகின்ற வாசம் இன்னும் பசியைத் தூண்டும். காலையில் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் முருங்கையிலைப் பொடியைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இரத்தம் விருத்தியடையும். இடுப்பு வலி, கால்வலி எல்லாம் உடம்பில் கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படுவது. முருங்கையில் அபரிமிதமான கால்சியம் சத்துக்களும், வைட்டமின் ஏ சத்துக்களும் உள்ளது.
  சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் கொண்டு வரும். மன ரீதியான பிரச்சினை, சிறுநீரக பிரச்சனை, சளித் தொல்லை, ஆஸ்துமா, எலும்பு தேய்மானம் போன்ற அனைத்து உபாதைகளில் இருந்தும் விடுபடலாம்.
  அதிக சத்துக்கள் இருப்பதாக அகத்திக்கீரையை நினைத்திருப்பார்கள். அகத்தியை தினமும் சமையலில் பயன்படுத்த முடியாது. எல்லா வகையான கீரைகளைவிட முருங்கைக்கீரையில் தான்  அதிகமான வைட்டமின் ’ஏ’ சத்துக்கள் இருக்கிறது. அடிக்கடி முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவடையும்.

  drumstick leaf

  முருங்கைக்கீரையும் பருப்பும் சேர்த்து பொரியல் செய்து அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு இரண்டு நாட்டுக் கோழிமுட்டைகளை உடைத்து இதில் நன்றாக கிளறி இறக்கி சாதத்துடன் அல்லது தனியாகவோ சாப்பிட்டு வர உடம்பில் புது ரத்தம் உற்பத்தியாகி உடல் வலிமை பெறும்.
  முருங்கைப் பூக்களைத் தேவையான அளவு எடுத்து, கழுவி, சுத்தம் செய்து, அதனுடன் துவரம்பருப்புச் சேர்த்து கூட்டு வைத்து தினசரி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர புதிய இரத்தம் ஊறும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தீரும்.