அனிதாவுக்கு மரணம்… எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா? – உதயநிதி 

  0
  1
  Udhayanithi

  டாக்டர் ஆக வேண்டிய கனவுடன் படித்த அனிதாவுக்கு மரணம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

  டாக்டர் ஆக வேண்டிய கனவுடன் படித்த அனிதாவுக்கு மரணம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

  நாங்குநேரி மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி, “நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் கண்டிப்பாக திமுக வெற்றி பெரும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியின் எடுபிடியாக இருக்கிறார். தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது இங்கு வராத மோடி தற்போது வேட்டி அணிந்து வந்து விட்டு தமிழகம், தமிழர்கள், தமிழ் என பேசிக்கொண்டிருக்கிறார்.

  Udhayanidhi

  புயல் பாதித்த பகுதிகளை பார்க்கவும் வரவில்லை, தற்போதுவரை தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையையும் அவர் வழங்கவில்லை. நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றுத் தராத காரணத்தால், டாக்டர் ஆக வேண்டிய மாணவி அனிதா உயிரிழந்தார். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் தரப்பட உள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் அவலம்” என தெரிவித்தார்.