அனாமத்தாகத் கிடந்த ரூ.3 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த நேர்மை மனிதன் : குவியும் பாராட்டுகள்..!

  0
  3
  மதன் ராஜ் ஜெயின்

  தெருவில் ஒரு ரூபாய் கிடந்தால் கூட, அதனை எடுப்பவருக்குச் சொந்தம் எனக் கூறும் சமூகம் இது.

  தெருவில் ஒரு ரூபாய் கிடந்தால் கூட, அதனை எடுப்பவருக்குச் சொந்தம் எனக் கூறும் சமூகம் இது. மற்றவர்கள் வைத்திருக்கும் பணத்தைப் பார்த்தே பொறாமைப் படும் இவ்வுலகத்தில், நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ரோட்டில் கிடந்த பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டு செல்லாமல் காவலில் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைக்கிறது. 

  மதன் ராஜ்

  சென்னை, மேற்குத் தாம்பரத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்து வருபவர் மதன் ராஜ் ஜெயின். இரண்டு நாட்களுக்கு முன்பு, இவர் தனது கடையின் அருகே ரொம்ப நேரமாக ஒரு பை கிடந்ததைக் கவனித்து வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த பையை எடுத்துப் பார்த்த மதன் ராஜ் அதில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

  மதன் ராஜ்

  அதன் பிறகு, யாரேனும் தேடிக் கொண்டு வந்தால் கொடுத்து விடலாம் என்று அந்த பணத்துடன் கடையில் காத்திருந்துள்ளார். ஆனால், யாரும் வரவில்லை என்பதால் காவல்துறையினரிடம் ஒப்படைத்து விடலாம் என்று எண்ணி மேற்குத் தாம்பரம் காவல்நிலையத்துக்குச் சென்று, காவல்துறை உதவி ஆணையரிடம் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளார். மதன் ராஜ்  செய்த இந்த செயலால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர்.