அனல் பறக்கும் டெல்லி தேர்தல் களம்! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக களமிறக்கிய ஜாம்பவான்…

  0
  4
  Arvind Kejriwal with suni

  டெல்லி சட்ட‌ப்பேரவைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுனில் யாதவே போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 

  டெல்லி சட்ட‌ப்பேரவைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுனில் யாதவே போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 

  70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

  Arvind Kejriwal

  பாரதிய ஜனதா சார்பில் களம் காணும் பத்துபேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாரதிய ஜனதாவின் ‌யுவமோர்ச்சா தலைவர் சுனில் யாதவ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்சியின் பல்வேறு மட்டங்களில், அவரை மாற்ற வேண்டும் என பேச்சு எழுந்தது. அதன் விளைவாக சுனில் யாதவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வேறு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், சுனில் யாதவ்- வை மாற்றும் எண்ணமில்லை என்‌று டெல்லி பாரதிய ஜனதா பொறுப்பாளர் (SHYAM JAJU) ஷ்யாம் ஜஜூ தெரிவித்துள்ளார். சுனில் வெற்றி பெறுவதை தாங்கள் உறுதி செய்வோம் எனவும் ஷியாம் ‌கூறியிருக்கிறார். 

  இதேபோல் காங்கிரஸ் 66 இடங்களிலும், ஆம் ஆத்மி 70 இடங்களிலும், பாஜக 67 இடங்களில் களம் காணுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று தாக்கல் செய்யப்பட்டது.