அனல்பறக்கும் பிக் பாஸ் வீடு: ஷெரின் – லாஸ்லியாவுக்கு காயம்!

  0
  1
  பிக் பாஸ் 3

  வட்டத்துக்குள் ஓடி கொண்டு மற்ற ஹவுஸ்மேட்ஸ் கோணிப்பையில் உள்ள தெர்மாகோலை வெளியேற்றவேண்டும்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும்  வெற்றி பெற்றார்கள்.

   

  இந்நிலையில்  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், வட்டத்துக்குள் ஓடி கொண்டு மற்ற ஹவுஸ்மேட்ஸ் கோணிப்பையில் உள்ள தெர்மாகோலை வெளியேற்றவேண்டும். இதில் சேரன், ஷெரின் கவின் ஆகியோர் அவுட் ஆக லாஸ்லியா, தர்ஷன், முகின், சாண்டி ஆகியோர் விளையாடுகிறார்கள். இதில் ஹவுஸ்மேட்ஸ் சிலருக்கு காயமும் ஏற்படுகிறது.

  bb

  முன்னதாக விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெறாத லாஸ்லியா, சாண்டி ஆகியோருக்குள் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.