அந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும்…மேடையில் சும்மா நடிச்சேன்: உளறி கொட்டிய தர்ஷன்

  0
  9
  தர்ஷன்

  வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார் தர்ஷன்.

  பிக் பாஸ் வெற்றியாளர் தர்ஷன் தான் என்று நினைத்திருந்த ரசிகர்கள் மத்தியில் தர்ஷனின்  வெளியேற்றம் இன்னும் கூட அவரது  ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார் தர்ஷன்.

  tharshan

  இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் மேடையிலேயே  அறிவித்தார். அப்போது மகிழ்ச்சியில் தர்ஷன் மட்டுமல்ல அவரது தாயும் கண்கலங்கி அழுதார். இதை  அப்போது பேசிய  தர்ஷன், நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி  கண்ணீர்  விட்டு அழுதார்.

  tharshan

  இந்நிலையில் சமீபத்தில்  ஒரு பேட்டியில்  கலந்து கொண்ட தர்ஷனனிடம் ராஜ்கமல் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், எனக்கு அந்த தகவல் எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் மேடையில் சர்ப்ரைஸாக  இருந்தது போல காட்டினேன் என்று கூறிவிட்டார். பின்னர் அதை சமாளித்து பேசியுள்ளார்.  இதை பார்த்த அவரது ரசிகர்கள் அடேய் தர்ஷா… உளறிட்டியே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.