’அந்த வாட்ஸ் அப்புக்கே ஒரு பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா அழுவேன்?’…

  0
  12
   வாட்ஸ் அப்

  உற்றார், உறவினர், நண்பர்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் லஞ்சுக்கு அப்புறம் போன் போட்டு விசாரிச்சுக்கலாம்

  உற்றார், உறவினர், நண்பர்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் லஞ்சுக்கு அப்புறம் போன் போட்டு விசாரிச்சுக்கலாம் என்று நினைக்கிற இந்த ‘வாட்ஸ் அப்’புக்கு நேற்று கொஞ்ச நேரம் ஹெல்த் பிராப்ளம் என்றவுடன் பதறியடித்து ‘என்னாச்சு என்னாச்சு’ என்று இருப்பு கொள்ளாமல் தவித்தது. அந்தத் தவிப்பானது ‘எதாவது பிரச்சினைன்னா தெய்வத்துகிட்ட போய் நிப்பேன். அந்த தெய்வத்துக்கே பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா நிப்பேன்’என்பது போலவே இருந்தது.

  social media

  நேற்று இரவு சுமார் 7.30 மணி முதலே வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியொக்கள் டவுன் லோடு ஆகவில்லை. ’டவுன்லோடில் பிரச்சினை உள்ளது. இன்னொரு முறை அனுப்பச் சொல்லுங்கள்’ என்று வாட்ஸ் அப் திரையில் காட்டியது. ஆனால் எத்தனை முறை அனுப்பியும் டவுன் லோடு ஆகவில்லை.இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று உலகின் பல பகுதிகளிலும் நேற்று வாட்ஸ் அப் இப்படி ஆகிவிட்டதால் உலகமெங்கிருந்தும் வாட்ஸ் அப்புக்கு என்னாச்சு என்ற குரல்கள் ட்விட்டரில் ஒலிக்க ஆரம்பித்தன.

  வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகள் இப்போது ஃபேஸ்புக் சர்வரின் மூலமே இயக்கப்படுகின்றன. அந்த சர்வரில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால் இப்படி ஆகிறது என்று சிலர் பதிவிட்டார்கள்.ஆனால் நேற்றிரவு பத்து மணி அளவில் ஃபேஸ்புக் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிரச்சினையை நாங்கள் அறிந்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகிறோம், மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம்’ என்று அறிவித்தது.

  facebook

  இன்று காலை 6 மணிக்கு இடப்பட்ட ஃபேஸ்புக்கின் ட்விட்டர் பதிவில், “பிரச்சினை கிட்டத்தட்ட முழுமையாக தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் 100% சேவையை தொடர்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. அதுபோலவே இன்று காலை வாட்ஸ் அப்பில் படங்கள் டவுன்லோடு ஆக ஆரம்பித்திருக்கின்றன. மனிதர்கள் பதட்டம் தணிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள்.