அந்த மனுஷன் வேற லெவல்; விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் !!

  0
  2
  விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித்

  தன்னை கிண்டலடித்த இந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் மனதார பாராட்டியுள்ளார். 

  தன்னை கிண்டலடித்த இந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் மனதார பாராட்டியுள்ளார். 

  steve smith

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 14-ஆவது ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தனது  2-ஆவது வெற்றியை பதிவு செய்தது.
  இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் இருக்கும் போது அங்கு கூடியிறுந்த இந்திய ரசிகர்கள், கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஸ்மித்தை சிறுமைப்படுத்தும் வகையில் “ஏமாற்றுக்காரர்” என்றும் கூச்சலிட்டானர். இதனைக் கண்ட விராட் கோலி, ரசிகர்களை பார்த்து, ஸ்மித்தை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். கோலியின் இச்செயலைக் கண்ட ஸ்மித், கோலியை தட்டிக் கொடுத்து நன்றியினை  தெரிவித்தார். இது குறித்து விராட் கோலி பேசுகையில் “என்றோ ஏதோ நடந்துவிட்டது. ஸ்மித் அணியில் மீண்டும் இணைந்து விட்டார். அவர் இப்போது சிறப்பாக விளையாடுகிறார். பழைய கதைகளை கிளறி அவரை வேதனைப்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.

  smith and kholi

  இதற்கு பதில் அளித்த ஸ்மித் கூறியதாவது, “மைதானத்தில் இருந்து ரசிகர்கள் என்ன சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. இது என்னை ஒரு போதும் பாதிக்காது. நான் அதிலிருந்து  வெளியே வந்துவிட்டேன். இருந்தாலும் கோலியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என பாராட்டு தெரிவித்தார்.