அத்து மீறிய ஆடம்பர கார்…9.8 லட்சம் ஃபைன்… அசரவைத்த அகமதாபாத் போலீஸ்..!

  0
  10
  ஆடம்பர கார்

  நோ மீன்ஸ் நோ! தப்புனா தப்புதான்! சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்களும் குறையும் என்பதற்கு எடுத்துக்காட்டான சம்பவத்தை தரமாக செய்து காட்டியிருக்கிறது அகமதாபாத் போலீஸ்! பொதுவா நம்ம ஊரில் பாவப்பட்ட ஆட்களையும்,ஒரு மாதிரி பழைய கார்களையும் டார்கெட் வச்சு போலீஸ் மடக்கிப் பிடித்து சோதனை போடுவதைப் பார்த்திருப்போம். அகமதாபாத் போலீஸ் விலை உயர்ந்த சொகுசு கார்களாகப் பார்த்து வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

  car

  சமீபத்தில் அப்படியொரு வேட்டையின் போது,அதி வேகமாக சீறிப் பாய்ந்து வந்த ஒரு போர்ச்சே காரை மடக்கி நிறுத்தி சோதனை செய்திருக்கிறார்கள். அந்தக் காரில் நம்பர் பிளேட் இல்லாததைப் பார்த்த அஸிஸ்டெண்ட் கமிஷனர் 
  தேஜஸ் பட்டேல் தலைமையில போலீஸ் டீம் அதிர்ந்து போய்.. ஆர்.சி.புக் இன்ன பிற டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக் காட்ட சொல்லியிருக்கிறார்கள். அவசரத்துக்கு ஒரு போன் நம்பரை குறித்து வைக்கக்கூட துண்டு சீட்டு இல்லாமல் இருந்திருக்கிறார் காரை ஒட்டி வந்த அந்த தொழிலதிபர்!

  மெட்டாலிக் க்ரே நிறத்தில் இருந்த 911 போர்ச்சே காரின் விலை இரண்டு கோடிக்கும் அதிகம்.நம்ம ஊராக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கு விட்டுரலாம்.அகமதாபாத் போலீஸ் 9.8 லட்சம் ஃபைன் போட்டு காசை வாங்கிக்கொண்டு ரசீது போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவுலயே ஒரு தனி நபரிடம் வாகன சோதனையின் போது இவ்வளவு ஃபைன் வசூலித்தது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்!

  கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அகமதாபாத் சிட்டியில் மட்டும் வசூலான தொகை 5.75 கோடி!இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ‘நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டால் எல்லாமே மாறும்’ என்று ட்வீட்டைத் தட்டி விட லைக்ஸ் அண்ட் ஷேர் அள்ளுது.