அத்திவரதர் கோயிலில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திருந்த 4 பேர் கைது! 

  0
  2
  athi varadar

  40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது

  காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் விஐபி வாகனங்கள் செல்லும் வழியில் பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.  

  அத்திவரதர்

  அத்தி வரதர்  இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் மக்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே ஆர்வமுடன் அத்தி வரதரை தரிசித்து விட்டு சென்றனர். அத்தி வரதர் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பதால், இன்றிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக நேற்று  தரிசன நேரம் குறைக்கப்பட்டு பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  அத்திவரதர்

  இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து விஐபி வரிசையில் வரக்கூடிய பகுதியில் 4 பேர் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் கைது செய்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.. அந்த நான்கு பேரும் நேற்று இரவு அருகிலிருக்கும் பெட்ரோல் பங்கில் உள்ள  ஊழியர்களிடமிருந்து பணப்பையை பறிந்து சென்றதும் தெரியவந்துள்ளது.