அத்திவரதர் குளத்திற்குள் செல்லும் 253 பேர்… யார் இவர்கள்?

  0
  5
  athivaradar

  அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் நிகழ்வில் பங்கேற்க 253 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் நிகழ்வில் பங்கேற்க 253 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  athivaradar

  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த ஜூலை  1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஜூலை 31 ஆம் தேதிவரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்தி வரதர், அதன்பிறகு நின்ற கோலத்தில் அருள்பாலித்து வந்தார். இதுவரை கோடிக்கணக்கான மக்கள் அத்தி வரதரைத் தரிசித்து உள்ளனர். நேற்று இரவுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவடைந்தது. இந்நிலையில் இனிவரும் 40 ஆண்டுகள் அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படுவார். அதனால் இன்று அதிகாலையே  அத்தி வரதருக்குப் பரிகார பூஜை தொடங்கியது.  

  அடுத்த 40 ஆண்டுகளுக்குச் சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மூலிகை திரவியங்கள்  பூசப்படுகிறது. சரியாக இன்று இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் அத்தி வரதர் சிலை குளத்தில் வைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும்  என்று தெரிகிறது.

  athi

  அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் நிகழ்வில்  253 பேர் பங்கேற்கவுள்ளனர். கோயில் பட்டாச்சாரியர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் என மொத்தம் 253 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அத்திவரதரை குளத்தில் இறக்கும் நிகழ்வில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.