அத்தனையும் படுதோல்வி… ஆனாலும் விடாது துரத்தும் பார்ட் 2 படங்கள்…

  15
  களவாணி 2

  தமிழில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் மோகம் அதிகரித்து வருகிறது.

  தமிழில் பார்ட் 2 என்ற பெயரில் எடுக்கப்படுகிற 90 சதவிகித படங்கள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் படமான ‘சூது கவ்வும்’பட பார்ட் பணிகள் துரித கதியில் நடந்துவருகின்றன.

  kamal

  தமிழில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்தின் எந்திரன் படம் இரண்டாம் பாகமாக 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகமும் வந்தது. டார்லிங், கோ, மணல் கயிறு, மாரி, சண்டக்கோழி, தில்லுக்கு திட்டு படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன.சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வெளியானது. கமல்ஹாசனின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசன் இதில் நடிக்க உள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

  vishnu

  இந்த வரிசையில் ’சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. இந்த படம் 2013-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இயக்கினார். தற்போது சூது கவ்வும் 2-ம் பாகத்திலும் விஜய் சேதுபதி தொடங்கி முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரையும் உள்ளே கொண்டுவரும் வேலைகள் துவங்கியுள்ளனவாம்.

  கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘களவாணி’பார்ட் 2 வரை அத்தனை படங்களும் மண்ணைக் கவ்வி வரும் நிலையில் இந்த பார்ட் 2 வியாதிக்கு யார்தான் ட்ரீட்மெண்ட் கொடுப்பது?