அதெல்லாம் இனி இங்கே நடக்காது… எடப்பாடி அதிரடி முடிவு… அய்யோ பாவம் தேமுதிக..!

  0
  6
  விஜயகாந்த்

  கூட்டணி கட்சிகள் அடம் பிடித்தால் அக்கட்சிகளை கழற்றி விட்டு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயாராகி விட்டது.

  உள்ளாட்சி தேர்தலில் அதிக இட ஒதுக்கீடு கேட்டு அடம் பிடிக்கும் கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து போட்டியிட அ.தி.மு.க.வும், தி.மு.க.,வும் திட்டமிட்டு உள்ளன.

  விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இருகூட்டணிகளிலும் துவங்கி உள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கட்சி இரண்டு மேயர் பதவிகள் கேட்டு வருகிறது. தேமுதிகவும் இரண்டு மேயர் பதவிகளை கேட்டு வருகிறது. எந்த ஒரு கூட்டணி கட்சிக்கும் மேயர் பதவியை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை.

  edappadi

  இதனால், அந்தக்கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், அதிக இடஒதுக்கீடு கேட்டு கூட்டணி கட்சிகள் அடம் பிடித்தால் அக்கட்சிகளை கழற்றி விட்டு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயாராகி விட்டது. அதேபோல், தி.மு.க.,விடமும் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்டு பேரம் பேச காத்திருக்கின்றன.

  vijayakanth

  அதுபோன்ற நெருக்கடி தரும் கட்சிகளை ஓரங்கட்டவும், எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கொடுக்கிற இடங்களை வாங்கிக் கொள்ளும் கட்சிகளை மட்டுமே, பக்கத்தில் வைத்திருக்கவும் தி.மு.க., தலைமையும் முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் கட்சி பிரதிநிதிகள் அதிகமாக இருந்தால் தான் அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்த முடியும் என அ.தி.மு.க – தி.மு.க கட்சிகள் கருதுகின்றன. ஒரு சட்டசபை தொகுதிக்கு, இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 300 ஒன்றியங்களை கைப்பற்றினால் அடுத்த சட்ட சபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என இரு கட்சிகளுமே கருதுகின்றன.

  edappadi

  எனவே இரு கட்சிகளும் பங்கீட்டு பிரச்னையை மையப்படுத்தி, கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு தனித்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.