அதிவேகமாக பரவும் டெங்கு…4 வயது சிறுமி பரிதாப பலி!

  0
  9
  கேத்ரீன்

  கடந்த இரண்டு தினங்களாகச்  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

  தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது. இதற்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். அந்த  வகையில் அம்பத்தூரின் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் – கவிதா தம்பதி. தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வரும் செல்வராஜுக்கு  கேத்வின், கேத்ரீன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

  dengu

  இதில் கேத்ரீன் சில நாட்களாக டெங்குகாய்ச்சலில் பாதிக்கப்பட்டாள்.  இதையடுத்து கேத்ரீனுக்கு  கடந்த இரண்டு தினங்களாகச்  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

  kethrin

  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று  குழந்தை கேத்ரீன் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.