அதிர்ஷ்டத்தையும், அற்புதத்தையும் நம்பி அதிமுக இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

  0
  9
  Jayakumar

  ரஜினி- கமல் இணைந்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  ரஜினி- கமல் இணைந்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

  இன்று காலை முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து பேசினார். 

  Rajinikanth

  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிர்ஷ்டத்தையும், அற்புதத்தையும் நம்பி அதிமுக இல்லை. மக்களை நம்பி உள்ளோம். அதிமுக என்ற மாபெரும் சிங்கத்தை, ரஜினி, கமல் என யார் இணைந்து வந்தாலும் அசைக்க முடியாது. கமல் முதலில் கட்சியை ஆரம்பித்து தனது வாக்கு வங்கியை காட்டிவிட்டார். ஆனால், ரஜினி இன்னும் தொடங்கவே இல்லை. முதலில் ரஜினி கட்சியை  தொடங்கட்டும்” எனக் கூறினார்.