அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஆடி பெருக்கு(3-8-2019)

  0
  1
  ஆடி பெருக்கு

  ஸ்ரீராமர் அசுரர்களை வென்ற பின், 66கோடி தீர்த்தங்களை கொண்ட `தட்சிண கங்கை’யான காவிரியில் நீராடி பாவம் நீங்கக் கடவது என்று வசிஷ்டர்  சொல்ல அப்படி ஸ்ரீராமர் காவிரியில் நீராடிய தினமே ஆடிப்பெருக்கு என்பதால் ஆடிப்பெருக்கின் பெருமையை உணரலாம். 
  தமிழகத்தில் மழை என்பது இரு வகைகளில் பெய்யும்.ஆடி மாதம் பெய்கிற மழை என்பது கன்னி மழை. விவசாயி பயிர் விதைக்கிற அளவு பெய்கிற மழை.  ஐப்பசி அடைமழை பயிர்கள் செழித்து வளர பெய்கிற மழை. 

  aadi

  விவசாயத்தை ஆதாரமாக கொண்டிருந்ததால் நம் முன்னோர்கள் கன்னி மழையை நீர்நிலைகளில் வரவேற்க விழா எடுத்துக் கொண்டாடினர். அதுவே ஆடிப்பெருக்கு.ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும்.  மக்கள் மட்டுமல்ல ஸ்ரீரங்கநாதரும் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி, அபிஷேக,ஆராதனைகளை ஏற்றுக்கொண்டபின் மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை,பாக்கு, பழங்கள்,இவற்றுடன் சீர் வரிசைகளை யானை மேல் வைத்து காவிரி அன்னைக்கு சீர் கொடுப்பது வழக்கம். 

  aadi

  ஸ்ரீரங்கநாதர் தன் தங்கைக்கு சீர் கொடுப்பதைப் போன்றே இப்பகுதியில் அதாவது தென் தமிழகத்தில் இப்பொழுதும் சகோதரிகளுக்கும், மைத்துணர்களுக்கும் ஆடிப்பெருக்கில் சீர் கொடுக்கும் வழக்கம் நடை முறையில் உள்ளது.
  வீடுகளில் ஆடிப்பெருக்கு
  காவிரியை சுற்றி மட்டுமல்ல நம் வீட்டிலும் ஆடிப்பெருக்கை எளிமையாக கொண்டாடலாம். ஒரு குடம் அல்லது செம்பில் நீர் நிறைத்து, அதில் மஞ்சள்  சேர்த்து கரைத்து விட்டு ,பின் சில உதிரிப் பூக்களை போட வேண்டும். விளக்கேற்றி வழிபாடு செய்து, விநாயகரை வணங்கி, பின் தூப, தீபங்கள் காட்டி கற்பூர ஆரத்தி செய்தல் வேண்டும்.

  aadi

  அப்போது காவிரி,கங்கை,சரஸ்வதி, யமுனை,வைகை,தாமிரபரணி போன்ற புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால் செல்வம் சேரும் என்பது ஐதீகம். பூஜை முடிந்த பிறகு செம்பு அல்லது குடத்தில் உள்ள நீரை செடி, கொடிகளுக்கு ஊற்றி விடவேண்டும்.