அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் சம்மன்! குமாராசாமி ஆட்சி மேலும் ஒரு நாள் நீடிக்க வாய்ப்பு!

  0
  2
  சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார்

  கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கூட்டணி ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கூட்டணி கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.கள்தான். காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினர். இதனால் காங்கிரஸ்-ஜனதாதள கூட்டணி அரசின் பெரும்பான்மை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

  kumarsamy

  இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய இரண்டு கட்சிகளும் முயன்றன. ஆனால் அதிருப்தி எம்.எல்,ஏ.க்கள் தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர். இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் நாளை காலை 11 மணிக்கு தன்னை வந்து சந்திக்கும்படி சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.

  இன்று காலையில் சட்டப்பேரவையில் சபாநாயகர் பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் இன்று முடிவடையும். அவை வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறேன். இது தொடர்பாக என்னால் தனியாக முடிவு எடுக்க முடியாது. அதேசமயம் இந்த நடைமுறையை இன்று முடிப்பதாக அரசாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

  government

  இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது. நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதனால் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.