அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை!

  0
  1
   ஏ.சி. சண்முகம்

  வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

  வேலூர் : வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார். 

  ac

  வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்புக் காவல்படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 500 காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ‌வாக்கு எண்ணும் மையத்தில் 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

  ac

  தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஏ.சி. சண்முகம் 50.39% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுகவின் கதிர் ஆனந்த் இதுவரை 43.88% வாக்குகள் பெற்றுள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அதிமுகவின் ஏ.சி. சண்முகம் 7,074 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார்.