அதிமுக பெண் எம்எல்ஏ உயிருக்கு குறி… நாய்கள் கொடுத்த ஷாக்..!

  0
  5
  மனோண்மணி

  எப்படியாவது நாய்களை கொன்ற கொலைகாரர்கள் கூண்டோடு கண்டுபிடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என அடிமனதில் வேதனையை கொட்டினார்கள்.

  சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோன்மணி. இவர் குடும்பத்தின் செல்ல வளர்ப்பு பிராணிகள் என மூன்று நாய்கள் விஷம் குடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சேலம் அதிர்ந்து கிடக்கிறது.

  சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி வசிக்கும் பூலாவரி பகுதி மக்கள் இது குறித்து பேசும்போது, புத்தாண்டு தினமான கடந்த புதன்கிழமை காலையில் குடும்பத்துடன் மனோன்மணி கோவிலுக்குச் சென்றார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டில் அவர்கள் ஆசையாக வளர்த்த 3 நாய்கள் இறந்து கிடந்தன. இதில் ஒரு நாய் வீட்டு வாசலிலும் மற்றொரு நாய் வீட்டின் பின்புறம் இன்னொரு நாய் தோட்டத்தில் மர்மமான முறையில் செத்துக் கிடந்தன. இதனைப் பார்த்த மனோன்மணி மயங்கி விழுந்துவிட்டார்.

  போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் உடனே கால்நடை டாக்டர்கள் போலீசார் எங்கே வந்து விரைந்து வந்தனர். இதனை அடுத்து 3 நாய்களின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். நாய்களின் உடல் கூறு மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட தகவலில் நாய்களை விஷம் வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே எந்த வகையான விஷம் குடித்து நாய்கள் கொல்லப்பட்டு என்பது தெரியவரும். dogs

  வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து யாராவது மர்ம நபர்கள் வைத்து சென்றார்களா சந்தேகத்துக்கு இடமாக அந்த பகுதியில் சுற்றித் திரிகிறார்கள் என்பது குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மனோன்மணி எம்எல்ஏவுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் போது பயங்கரமான கொலை மிரட்டல் வந்ததால் அவருக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் அவரது வீட்டில் விளக்கு நகைகள் அப்படி இருப்பது அவருக்கு இடப்பட்ட எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்கிற சந்தேகம் இருக்கிறது. 

  மனோன்மணி கட்சியையும் நன்றாக வளர்த்து வருவதால் முதல்வர் எடப்பாடியாரிடம் நற்பெயர் பெற்றிருக்கிறார். போலீசார் எப்படியாவது நாய்களை கொன்ற கொலைகாரர்கள் கூண்டோடு கண்டுபிடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என அடிமனதில் வேதனையை கொட்டினார்கள்.