அதிமுக கூட்டணியில் பா.ம.க ராமதாஸ் எடுத்த பகீர் முடிவு… குழப்பத்தில் தி.மு.க..!

  0
  1
  ராமதாஸ்

  பா.ம.க – தே.மு.தி.க இரு கட்சியினரும் பரஸ்பர உள்குத்தால் தான் அன்புமணியும், விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷும் தோற்று விட்டதாக இண்டு கட்சிக்காரர்களும் வெளிப்படையாக புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

  எதிரும், புதிருமாக இருந்தாலும் வேறு வழியே இன்றி அதாவது போகிடமின்றி பாமகவும்- தேமுதிகவும் கூட்டணியை தொடர முடிவு செய்திருக்கிறார்கள். vijayakanth

  விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராமதாஸுடன் ஏற்பட்ட மோதல் இன்னும் நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று வருகிறது.  அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து பா.ம.க., – தே.மு.தி.க., கட்சிகள், மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், இரண்டு கட்சிகளும் மண்ணைக் கவ்வின. 

  பா.ம.க – தே.மு.தி.க இரு கட்சியினரும்  பரஸ்பர உள்குத்தால் தான்  அன்புமணியும், விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷும் தோற்று விட்டதாக  இண்டு கட்சிக்காரர்களும் வெளிப்படையாக புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கோபத்த்தில் தான், ராமதாஸ் பிறந்தநாளுக்கு விஜயகாந்த் வாழ்த்து சொல்லவில்லை. பதிலுக்கு விஜயகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை ராமதாஸ், அன்புமணி தவிர்த்து விட்டனர்.

  Ramadoss

  அதே நேரம், ‘இப்படியே போனால் கட்சி காலியாகிடும்’ என சிலர் எச்சரித்து இருக்கின்றனர். அதனால் திரும்பவும், சகிப்பு தன்மையுடன் அ.தி.மு.க., கூட்டணியை தொடர, இரண்டு கட்சி தலைமையும் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவுக்கும் வேறு வழியில்லை. 

  stalin

  இங்கு நிலைமை இப்படி என்றால் காங்கிரஸ் கட்சி கூட இருந்தே கலகம் செய்து வருகிறது திமுக கூடாரத்தில்… நாங்குநேரியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் -திமுக கூட்டணி தொடரும். இல்லையேல் கூட்டணி கேள்விக் குறிதான்.