அதிமுக கரைவேட்டி கட்டாத கலெக்டர்… சேலத்தில் எம்.எல்.ஏ.,க்கள் செம டென்ஷன்..!

  0
  2
  Edappadi K Palanisamy Rajendra Balaji

  சட்டசபையிலும், கட்சி பொதுக்கூட்டங்களில் தங்கள் தலைவரை புகழ் பாடுவதில் யார் சிறந்தவர்கள் என எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர் போட்டி போட்டு பேசுவார்கள்.

  சட்டசபையிலும், கட்சி பொதுக்கூட்டங்களில் தங்கள் தலைவரை புகழ் பாடுவதில் யார் சிறந்தவர்கள் என எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர் போட்டி போட்டு பேசுவார்கள்.

  collector

  ஆனால், உங்களைவிட நான்தான் நன்றாக புகழ்ந்து பேசுவேன் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எடப்பாடியாரை அரசு விழாவில் காதில் புகை வரும் அளவுக்கு புகந்து தள்ளி விட்டாராம். சொந்த மாவட்டத்தில் நடந்த ரிங்ரோடு திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்து கொண்டார்.

  சமீபத்தில் வேலூரில் இருந்து மாறுதலாகி வந்த கலெக்டர் ராமனுக்கு இது தான் சேலத்தில் முதல் விழா. வரவேற்று பேச வந்தவர் எடப்பாடியாரை சரமாரியாக புகழ்ந்து தள்ளிட்டார். பல்வேறு சிறப்புக்கு சொந்தக்காரர், மக்கள் இதயங்களில் வீற்றிருக்கும் எளியவர், விவசாய குடும்பங்களின் தலைமகன் என அடுக்கடுக்காகப் பேசி அசர வைத்து விட்டார்.

  mla

  மாவட்டத்துக்கு வந்து முதல் நிகழ்ச்சியிலேயே இப்படி முத்திரையை பதித்து விட்டார். பதவி வேண்டும் என்றாலும் நீடிக்க வேண்டும் என்றாலும் இப்படி பேசினால் தான் வேலை ஆகும் போல… ”பேசாம அந்த அதிகாரி கட்சி கரை வேட்டி கட்டிக் கொண்டு இப்படி பேசி இருக்கலாம்” என்பதே மக்களின் பேச்சாக இருக்கிறது.