அதிமுக அவுட்… திமுக டவுட்… பதற்றத்தில் டி.டி.வி.தினகரன்..!

  0
  4
  ஸ்டாலின்

  இந்திய அளவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுவதால் திமுக பாஜகவுக்கு ஆதரவு தருவது உறுதியாகி உள்ளது.

  தமிழக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் தேனி தொகுதியும் ஒன்று. தந்தி டிவி தனது கருத்து கணிப்பினை தற்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஓ பி ரவீந்திரநாத் தேனி தொகுதியில் முன்னிலை பெற்று இருக்கிறார். அதிமுக ரவீந்திரநாத் 35 – 41சதவிகித  வாக்குகளையும், காங்கிரஸ் 31 – 37 சதவிகித வாக்குகளையும், அமமுக 19-25 சதவிகித  வாக்குகளையும் பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆங்கில தொலைக்காட்சியான NEWSx தொலைக்காட்சியும் தேனி தொகுதியில் அதிமுக வெற்றிபெறும் கணித்து கூறியுள்ளது.ttv

  இதன் மூலம் தேனி தொகுதியில் என்றும் ஓபிஎஸ் தான் கிங் என்றும் தங்க தமிழ் செல்வன் போன்றோர் இதன்பின்பு காணாமல் போய் விடுவார்கள் என்றும் அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய தங்கள் கருத்துக்கணிப்பினை வெளியிட்டு வருகின்றன, அதன் படி, இந்தியா டுடே தமிழகத்தில் 38 தொகுதிகளை யார் கைப்பற்றலாம் என்ற முடிவினை வெளியிட்டுள்ளது.stalin

  அதன்படி திமுக கூட்டணி – 34 முதல் 38 இடங்களும். அதிமுக கூட்டணி 0-4 தொகுதிகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுவதால் திமுக பாஜகவுக்கு ஆதரவு தருவது உறுதியாகி உள்ளது.