அதிமுகவை மொத்தமாக கைப்பற்றப்போகும் ஓ.பி.எஸ்… சவாலால் நடுங்கித் தவிக்கும் எடப்பாடி..!

  16
  ஓ.பி.எஸ்

  அம்மாவின் ஆசி பெற்று மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் வசம் அதிமுக வரப்போவது உறுதி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

  இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் எப்போது புயல் வரும், எப்போது மழை வரும் எப்போது பிரிவு வரும் என எதிர்கட்சிகள் ஏங்கிக் கிடக்கின்றன. ஜெயலலிதா காலத்திலேயே இரண்டு முறை முதல்வராகி அனைவரது உள்ளத்திலும் இடம்பெற்றவர் இப்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம். 

  ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அவரே முதல்வராக பொறுப்பு வகித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம், வர்தா புயலில் அவரது அணுகுமுறைகளை கண்டு அரண்டு போன சசிகலாவுக்கு உள்ளூர உதறல் எடுக்க, தானே முதல்வராக வேண்டும் என்கிற ஆசை தலைக்கேறி, அம்மாவாக வேஷம் போட்டார். அது எடுபடாமல் போனது ஒரு புறமிருக்க, ஓவர் பில்ட் அப்பால் முதல்வராகும் முன்பே சிறைக்கு சென்று விட்டார். edappadi

  ஒருவேளை ஓ.பி.எஸே முதல்வராக தொடர்ந்திருந்தால், சசிகலா சிறைக்கு செல்லாமல் காப்பாற்றப் பட்டிருப்பார். கூவாத்தூர் நாடகத்திற்கு பிறகு வெகுஜனம் அறிந்திடாத எடப்பாடி முதல்வராகி விட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியை முதல்வராக்கியதை கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, எதிர்கட்சியினரால் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. அப்போது தான் ஆரம்பித்தது சசிகலாவின் சறுக்கல். 

  செல்வாக்குமிக்க ஓ.பி.எஸ் கட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் பதவி வகிக்க, எவராலும் ஏற்றுக் கொள்ளப்படாத, சகித்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி முதல்வராக எதேச்சிகாரத்தை இப்போது வரை காட்டி வருகிறார். அவரால் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதை கண்கூடாக  அறிந்து வரும் கட்சியின் பெரும்பாலானவர்கள் ஓ.பி.எஸை தலைமையேற்கச் சொல்லி மன்றாடி வருகிறார்கள்.

   ops

  ஆகையால் எப்போதும் பணிவு காட்டி வரும் பன்னீர்செல்லவம் இப்போது அதிமுகவை காப்பாற்றும் நோக்கத்துடன் துணிவு காட்ட தொடங்கி விட்டார் என்கிறார்கள். பதவியை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடிக்கு பெரும் சவால் விட்டு காத்திருக்கிறார் ஓ.பி.எஸ். 

  வரும் டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கிறது. அந்தப் பொதுக்குழு எடப்பாடியின் எதேச்சிகாரத்தால் கண்துடைப்புக்காகவே நடைபெற உள்ளது. ஆகையால் அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை எடப்பாடிக்கு எதிராக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஓ.பி.எஸ். அதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

  ’’தமிகழத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் தென் மாவட்டங்களில் உள்ள 110 தொகுதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மீதமுள்ள வடக்கு மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளை எடப்பாடி பார்த்துக் கொள்ளட்டடும். எனது பொறுப்பில் உள்ள தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட எந்த விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி தலையிடக்கூடாது. அதேபோல் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது தலையீடு இருக்காது. கட்சியில் இருந்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் நிதியை மட்டும் கொடுத்தால் போதும். ops

  மீதமுள்ள செலவுகளை எனது சொந்த பணத்தில் இருந்து செலவழித்துக் கொள்கிறேன். இந்த 110 தொகுதிகளில் நான் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கிறேன். எடப்பாடி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றி பெற வைக்கட்டும். யார் அதிக தொகுதிகளை வென்று தருகிறார்களோ அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகிக்கலாம். 

  சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராவது ஒருபுறமிருக்கட்டும். ஒரு தொகுதி அதிகம் வென்றால் கூட நான் எடப்பாடிக்கு ஆதரவு தருகிறேன். இல்லையென்றால் அவர் ஒதுங்கிக் கொண்டு எனக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டு’’ என சபதம் விட்டு இருக்கிறாராம் ஓ.பி.எஸ். அந்த சபதத்தை எடப்பாடி தரப்பும் அரை மனதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். 

  இதில் ஓ.பி.எஸின் புத்திசாலித்தனமும், சாணக்கியத்தனமும் அடஙி இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் வெற்றியை அந்த சபதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் அது. அதாவது வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறும். அந்தக் கட்சிகள் தென்மாவட்டங்களில் அதிக சீட்டுக்களை கேட்க மாட்டார்கள். தேமுதிக, திருப்பரங்குன்றம், விருதுநகர் தொகுதிகளை மட்டுமே கேட்கும். மற்றபடி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், வேலூர் ஆகிய பகுதிகளை மட்டுமே குறி வைக்கும். ஆனால் பாமக தென்மாவட்டங்களில் ஒரு தொகுதியை கூட விரும்பாது. ஆக 110 தொகுதிகளை கழித்து மீதம் எடப்பாடி தரப்பில் ஒதுக்கப்படும் 134 தொகுதிகளில் எப்படியும் 50 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படிம்  நிலை உருவாகும்.

  edappadi

  அதன்படி பார்த்தால் எடப்பாடி தரப்பில் 80 சீட்டுக்கள் மட்டுமே அதிமுகவுக்கு மிஞ்சும். அப்படிப்பார்த்தால் அவர் வெற்றி பெற வைக்கும் தொகுதிகள் குறைவாகவே இருக்கும். இந்தக் கணக்குப்படின் பார்த்தால் ஓ.பி.எஸ் அதிமுகவை முழுமையாக கைப்பற்றி பொதுச்செயலாளராகி விடுவார் என்கிறார்கள்.   

  ஆக, அம்மாவின் ஆசி பெற்று மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் வசம் அதிமுக வரப்போவது உறுதி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.