அதிமுகவை கவிழ்க்க பாமக சதி… ராமதாஸுடன் கைகோர்க்கும் விஜயகாந்த்..!

  0
  1
  விஜயகாந்த்

  இதில் ராமதாஸ் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறாராம். அதே பாணியை விஜயகாந்தும் எடுக்க வேண்டும் என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கேட்டு வருகிறார்கள்.

  அதிமுக தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு போராட கூட முடியாத நிலை. காரணம் ராமதாஸுக்கு விஜயகாந்தை பிடிக்காது. அதிமுகவுக்கு பாஜக மாநில தலைமையை பிடிக்காது… இப்படி திடீரென ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்தும் கூட இந்த கூட்டணி தலைமைகள் ஒன்று கூடி அதிமுகவுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்களாம். 

  vijayakanth

  அதிமுக தலைமை கூட கேட்டதற்கு மழுப்பலாக பதிலை சொல்லி இதெல்லாம் எதிர் தரப்புக்கு வைச்ச செக் என்று சொல்கிறார்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு அதிகளவு செல்வாக்கு இருக்கிறதோ… அவர்களுக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் அல்லது துணை தலைவர் பதவி. இல்லாவிட்டால் கவுன்சிலர் பதவியோடு போக வேண்டியது தான். 

  edappadi palanisamy

  அதனால் அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் கட்சி சின்னத்தோடு ஒருவரையும் செல்வாக்குள்ள நபர்களை அதிமுக கட்சி போட்டியிடும் வார்டிலும் நிறுத்தி தலைவர் பதவியை கைப்பற்ற முடிவு செய்து இருக்கிறார்கள். குறிப்பாக இதில் ராமதாஸ் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறாராம். அதே பாணியை விஜயகாந்தும் எடுக்க வேண்டும் என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கேட்டு வருகிறார்கள். நம் வலிமையை நாம் ஆளுங்கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்கிறார்களாம்.