அதிமுகவை கலாய்க்க மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் பெரியய்யா புத்தகம்?!

  0
  1
  நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்

  தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தை சுட்டிக்காட்டி அதிமுகவை கலாய்த்து வருகிறார்.

  தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தை சுட்டிக்காட்டி அதிமுகவை கலாய்த்து வருகிறார்.

  பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவை விமர்சித்து வெளியிட்ட புத்தகம் கழகத்தின் கதை. அதிமுகவின் ஊழல்கள், குற்றச்சாட்டுகள் குறித்து இந்த புத்தகத்தில் விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவை கலாய்க்க இந்த புத்தகத்தில் இருந்தே பாய்ண்ட் எடுக்கிறார்.

  கழகம்

  பிரச்சார மேடையில் பேசிய ஸ்டாலின், அதிமுகவை விமர்சித்து மேடையில் பேசுவது, பேட்டி கொடுப்பது மட்டுமல்ல புத்தகமே போட்டிருக்கிறார் ராமதாஸ் என சுட்டிக்காட்டி பேசினார். மேலும் அவர், அதிமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசிய ராமதாஸ், அவர்களை தற்போது புகழ்ந்து வருவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ராமதாஸ் மணியடிக்கிறார்.  ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் என பட்டம் கொடுத்த அன்புமணி  டயர்நக்கிகளுடன் இப்போது அன்புமணி ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது’ என்று கடுமையாக விமர்சித்தார். 

  மாங்கா

  அதிமுகவை பற்றி விமர்சித்து பேசிய ஸ்டாலின், இத நான் சொல்லல பெரியய்யா சொல்லிருக்கார் அவருடைய புத்தகத்தில் என்றார்.

  ஸ்டாலின்

  பாமக கோட்டையாக கருதப்படும் தர்மபுரி தொகுதியில் அவர் இவ்வாறு பேசியதற்கு திமுக தொண்டர்கள் பலத்த கரகோசத்தை எழுப்பி ஆர்பரித்தனர். இப்படி ஒரு புத்தகம் போட்டதை நினைத்து ராமதாஸ் வருந்தியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது!

   

  இதையும் வாசிங்க

  அன்புமணி மீது இத்தனை வழக்குகளா? வேட்புமனு தாக்கலின் போது வெளியான உண்மை!? 

  பண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு?! 

  தி.மு.க வேட்பாளர் 26,000 கோடி இலங்கையில் முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை; வறுத்தெடுக்கும் ஆளுங்கட்சியினர்!