அதிமுகவுடன் 20 திமுக எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பு… மு.க.ஸ்டாலின் பேரதிர்ச்சி..!

  13
  ஸ்டாலின்

  20 எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல், மு.க.ஸ்டாலின் கைக்கு போயிருக்கிறது. இதில், பாதி பேர் மாஜி அமைச்சர்கள்.

  20 பேர் பட்டியல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைக்கு போயிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அ.தி.மு.க., பிரமுகர்களின் நெருங்கிய சொந்தங்கள், தி.மு.க.,வில் இருந்தாலும்  அவர்களிடம் பேசக் கூட மாட்டார்கள். அவர் மறைவுக்கு பிறகு இரு கட்சியினரும், ‘நண்பேன்டா’ மாதிரி பழகிக் கொண்டு இருக்கிறார்கள்.stalin

  இரு தரப்புகளுக்கும் தொழில் தொடர்புகளும் இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட மு.க.ஸ்டாலின், நிறுத்தணும்… எல்லாத்தையும் உடனே நிறுத்தணும்’ என கட்சிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தான் சொல்லியும் கேட்காதவர்கள் விபரங்களை சேகரிக்க, மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டிருந்தார்.

  இப்படி, 20 எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல், மு.க.ஸ்டாலின் கைக்கு போயிருக்கிறது. இதில், பாதி பேர் மாஜி அமைச்சர்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை வரும் என பட்டியல் கொடுத்தவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.