அதிமுகவுடன் மோதல்… ரஜினி, கமலை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக!

  0
  3
  Pon Radhakrishnan

  ரஜினியும், கமலும் எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  ரஜினியும், கமலும் எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  “உள்ளாட்சித் தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்ட பாஜக விரும்புகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை கவனித்து வருகிறது. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய தலைமை தான் முடிவெடுக்கும். 

  rajini and kamal

  உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான தேர்தல் மறைமுக தேர்வுக்காக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது தவறு இல்லை. அதே நேரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ரஜினியும் கமலும் தமிழக மக்கள் நலனுக்காக இணைத்து செயல்படுவோம் என எந்த அர்த்தத்தில் சொல்லியுள்ளனர் என தெரியவில்லை.  2 பெரும் பல ஆண்டுகளாக திரைத்துறையில் இணைந்து பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் தமிழக மக்களின் நலனுக்காக அப்படி சொல்லியிருக்கலாம்.

  ரஜினியும், கமலும் எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரலாம்” என தெரிவித்துள்ளார்.