அதிமுகவில் இப்படியொரு அமைச்சரா..? வாய் பிளந்த பிரேமலதா..!

  0
  5
  பிரேமலதா விஜயகாந்த்

  பிரேமலதா, ‘இப்படியொரு அமைச்சர் இருப்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது’ என அமைச்சரையே பதிலுக்கு கலாய்த்தார்.

  சிவகங்கை மாவட்ட அமைச்சர் பாஸ்கரன் தொடர்ந்து ஒவ்வொரு விழாவிலும் சர்ச்சைக்குரிய முறையிலே பேசி வந்தார். தமிழ்நாட்டில் இப்படி ஒரு அமைச்சர் இருப்பதே அதுவரை பல பேருக்கு தெரியாமல் இருந்தது.

  திடீர்னு பரபரப்பாக பேசி தன்னை ‘லைவ்’ ஆக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். கூட்டணியில் இருக்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து இவர் பேசிய பேச்சு கூட்டணியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் சமாளித்தாலும், தேமுதிக தரப்பில் கொந்தளித்து விட்டார்கள். premalatha

  இவரது கருத்துக்கு பதில் தெரிவித்த விஜயகாந்த் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, ‘இப்படியொரு அமைச்சர் இருப்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது’ என அமைச்சரையே பதிலுக்கு கலாய்த்தார். இந்த பேச்சுக்கு பிறகே அதிமுக மேலிடம், அமைச்சரை அழைத்து கடுமையாக கண்டித்தது. 
  அதனால் தற்போது அமைச்சர் எங்கும் வாய் திறப்பதே இல்லை. அரசு மற்றும் கட்சி விழா நிகழ்ச்சிகளுக்கு போனாலும், ரொம்பவும் வாயைத் திறக்காமல் இருந்து விட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் விருட்டென கார் ஏறி கிளம்பி விடுகிறார்.