அதிமுகவில் இணையுமாறு முதலமைச்சர் பழனிசாமி என்னை வற்புறுத்துகிறார் – அமமுக பழனியப்பன் ஓபன் டாக்!

  0
  6
  Edappadi palanisamy

  அதிமுகவில் தன்னை இணையவருமாறு முதலமைச்சர் பழனிசாமி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் அன்பழகன்  என்பவர் மூலம் தூது விடுகிறார் என முன்னாள் அமைச்சரும், அமமுகவில் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

  அதிமுகவில் தன்னை இணையவருமாறு முதலமைச்சர் பழனிசாமி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் அன்பழகன்  என்பவர் மூலம் தூது விடுகிறார் என முன்னாள் அமைச்சரும், அமமுகவில் துணை பொதுச்செயலாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

  தினகரன் அரசியலிலிருந்து தூக்கி எறியப்பட்டதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சரும், அமமுகவில் துணை பொதுச்செயலாளராகவும் இருக்கும்  பழனியப்பன்தான் என்றும் அவர்தான் அமமுகவிலிருக்கும் ஸ்லீப்பர் செல் என்றும் அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் ஆளுங்கட்சிக்கான தனது வேலையை செய்துவிட்டு பழனியப்பனும் அதிமுகவில் இணைவார் என்றும் புகழேந்தி தெரிவித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் பழனிசாமி பழனியப்பன் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என பதிலடி கொடுத்திருந்தார்.

  palaniyapan

  இந்நிலையில் இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன், அதிமுகவில் தன்னை இணையவருமாறு முதலமைச்சர் பழனிசாமி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் அன்பழகன்  என்பவர் மூலம் தூது விடுகிறார். அன்பழகன் தன்னை பாண்டிச்சேரியில் சந்தித்தார், அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதிமுகவில் இணைய முதல்வர் உள்ளிட்ட யாருக்கும் நான் தூது அனுப்பவில்லை” எனக்கூறினார்.