அதிமுகவிடம் மன்னிப்பு கேட்டிங்களா?: எல்லாவற்றிக்கும் எல்லை உண்டு அமைதியாக உட்காருங்கள்; பிரஸ்மீட்டில் ஆவேசமான அன்புமணி

  0
  3
  anbumani ramadoss

  அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது குறித்து  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் ஆவேசம் பொங்க பதிலளித்துள்ளார்.

  சென்னை: அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது குறித்து  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் ஆவேசம் பொங்க பதிலளித்துள்ளார்.

  அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, பாமக-வுக்கு 7 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி வழங்கப்படும் என்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வுக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக-பாமக கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான கூட்டணி. இது ஒரு மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

  anbumani

  இதையடுத்து அதிமுக பாமக கூட்டணியை பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக நாணயத்துக்காக வளைந்த கூட்டணி என்று முரசொலியும், மண்டியிட்டமாங்கா என்று டிவிட்டரிலும்  கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

  இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது. அதே போல் தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது. அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை, இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை. அதனால் தான் கூட்டணி வைத்துள்ளோம். ஆனாலும் பாமக தன்னுடைய கொள்கையிலிருந்து எள்ளளவும் பின் வாங்காது.

  anbumani

  தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான், 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையைப் பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதே போல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்; நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

  anbumani

  8 ஆண்டுகளாக தனித்து நின்றோம்; யாராவது பாராட்டினீர்களா? மக்கள் எங்களுக்கு ஒரு எம்எல்ஏ-வை கூட கொடுக்கவில்லையே. ஆட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். எங்களை மக்களும், பாமக தொண்டர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் விமரிப்பவர்களை பற்றி கவலையில்லை’ என்றார். 

  ஸ்டாலின், உங்கள் கூட்டணியைப் ‘பண நலக் கூட்டணி’ என்றுள்ளார். திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு, ‘தமிழகத்தில் இருக்கும் பிரதானக் கட்சிகள் எங்களை அணுகின. திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஐயா, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதன் பின்னர்தான் அதிமுக-வுடன் சேர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஸ்டாலினுடன் நாங்கள் செல்லவில்லை என்ற காரணத்தால் எங்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார் போல’ என்று பதிலளித்தார்.

  anbumani

  குறிப்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பல நேரங்களில் கோபப்பட்ட அன்புமணி, அதிமுக ஊழல் கட்சியா இல்லையா என்ற கேள்விக்கு, சிபிஐ விசாரணைகள் முடியட்டும், உண்மை தெரிய  வரும் என்றார். இதில் உச்சக்கட்டமாக, அதிமுகவுக்கு எதிராக வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்கிறீர்களா? என்ற கேள்விக்குக் கொதித்த அன்புமணி, எல்லாவற்றிக்கும் எல்லை உண்டு அமைதியாக உட்காருங்கள் என்று கடுப்பாகப் பதிலளித்தார்.

  எது எப்படியோ, இரட்டை நாக்கு அன்புமணியை வச்சி செய்யவேண்டும் என்று நினைத்திருந்த செய்தியாளர்களின் ஆசை இனிதே நிறைவடைந்தது.