அதிகாலை முதலே கனமழை…3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

  0
  4
  மழை

  மழையால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது. விடாமல் பெய்த மழையால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.

  ttn

  இதுகுறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்  புவியரசன், வடகிழக்கு பருவமழை மழை விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். அந்தப் வகையில் வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம் மற்றும் கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  மழை பெய்தது.  அதேபோல் இன்று மாலையும்  மழை பெய்யும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.