அதிகாரம் கையில் இருந்தால் என்னவேணாலும் செய்வீங்களா.!? மோடியைச் சாடிய பிரேமலதா!

  14
  பிரேமலதா,மோடி

  உள்ளாசித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எல்லாக் கட்சியினருமே தமிழகமெங்கும் பயணம் செய்து கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் சந்தித்து வருகின்றனர்.

  அதுவும்,மதுரை சென்னை,சேலம் என்று மூன்று நகராட்சிகளைக் குறிவைத்திருப்பதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகமெங்கும் பயணித்து விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.அந்த வரிசையில் நேற்று மதுரையில் நடபெற்ற கட்சிக்காரர் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரேம லதா,நமக்குத் தேவை ஞாயமான உள்ளாட்சித் தேர்தல். தேமுதிகவில் 50 சதம் சீட்டுகளைப் பெண்களுக்குத் தருவோம் என்று அமைதியாகத்தான் பேசினார்.

  உள்ளாசித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எல்லாக் கட்சியினருமே தமிழகமெங்கும் பயணம் செய்து கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் சந்தித்து வருகின்றனர்.

  premalatha

  அதுவும்,மதுரை சென்னை,சேலம் என்று மூன்று நகராட்சிகளைக் குறிவைத்திருப்பதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகமெங்கும் பயணித்து விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.அந்த வரிசையில் நேற்று மதுரையில் நடபெற்ற கட்சிக்காரர் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரேம லதா,நமக்குத் தேவை ஞாயமான உள்ளாட்சித் தேர்தல். தேமுதிகவில் 50 சதம் சீட்டுகளைப் பெண்களுக்குத் தருவோம் என்று அமைதியாகத்தான் பேசினார்.

  மகாராஷ்டிர விவகாரங்களுக்கு வந்தபோது மோடிக்கு ஒரு ஆலோசனைப் பஞ்ச் வைத்தார்.பிஜேபி இப்படி ஆட்சி அமைக்க இவ்வளவு அவசரப் பட்டிருக்கக் கூடாது.தங்களது பலத்தை சட்டசபையில் நிரூபித்து முறையாகவே ஆட்சிக்கு வந்திருக்கலாம்.ஆனால்,இரவோடு இரவாக ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
  அதிகாரம் கையில் இருக்கிறது எனபதற்காக எதையும் செய்யக்கூடாது என்று மோடியைச் சாடி இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

  premaltha

  அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுடன் பேசுகையில்,முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும் அதற்குப்பிறகு அதுபற்றிப் பேசலாம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தேமுதிகவில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழு அதிமுக தலைமையுடன் பேசி கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.