அதிகரிக்கும் PUBG மோகம்: மாணவர்களை மீட்பது எப்படி?

  0
  16
  pubg

  கர்நாடக ஆங்கில வழி  பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு  PUBGன் கேடுகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

  பெங்களூரு: கர்நாடக ஆங்கில வழி  பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு  PUBGன் கேடுகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

  2018-ன் தொடக்கத்தில் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது PUBG கேம். ஆனால், ஓர் ஆண்டு காலகட்டத்திலேயே பலரையும் வசப்படுத்திய இந்த ஆன்லைன் கேம் இன்று பலரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் விளையாட்டாக மாறியுள்ளது. 

  இந்நிலையில், ஆன்லைன் கேமிங் என்னும் பெரிய போதையில் உங்கள் குழந்தைகளை சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி புதிய உத்தரவையே பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா ஆங்கில வழி  பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு அனைத்துப் பள்ளிகளுக்கும் PUBG-ன் கேடுகள் குறித்து முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

  கர்நாடக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘PUBG ஆன்லைன் கேம் மீதான கட்டுப்பாடு அல்லது தடை குறித்து கல்வித்துறை உடன் கலந்தாலோசித்து வருகிறோம். குழந்தைகளையும், மாணவர்களையும் இந்த ஆன்லைன் கேம் மோகத்திலிருந்து விடுவிக்கக் காவல்துறையும் உதவ வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.