அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு….. ரூ.3.21 லட்சம் கோடி நஷ்டம்….. சென்செக்ஸ் 1,203 புள்ளிகள் வீழ்ச்சி

  0
  2
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 1,203 புள்ளிகள் குறைந்தது.

  நம் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. அதிகபடியான சப்ளையால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வர்த்தகத்தின் இடையே 4 சதவீதம் குறைந்தது. சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன. இதன் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

  கொரோனா வைரஸ்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டைட்டன் ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா, கோடக்மகிந்திரா வங்கி, டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  டெக் மகிந்திரா

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,129 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,078 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.110.28 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.3.21 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

  பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,203.18 புள்ளிகள் குறைந்து 28,265.31 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 343.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,253.80 புள்ளிகளில் நிலைகொண்டது.