அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி

  0
  1
  Sonia Gandhi

  அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

  சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததையடுத்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைப்பதென அக்கட்சியின் தலைமை முடிவு செய்தது.

  அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதியின் சிலை வடிவமைக்கப்பட்டு, அண்ணா அறிவாலயத்தில் அந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

  kalaignar

  அந்த சிலையை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.

  அந்த விழாவை முடித்துக் கொண்டு நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற சோனியா காந்தி, அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

  இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி சிறப்புரையாற்ற இருக்கிறார்.