அண்ணனின் தகாத உறவு… குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை!

  0
  3
  விமல்ராஜ், அனிதா

  அருண், நிக்கல்சன் நட்பில் நிக்கல்சனின் மனைவி ஷோபனா விஷத்தை ஊற்ற ஆரம்பித்தார்.

  நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவினால், தன் தங்கை உட்பட மொத்த குடும்பத்தையும் இழந்து தவித்து வருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். தற்போது 5 மாத பெண் குழந்தை மட்டும் யாருமில்லாமல் நிர்கதியாய் நிற்பது அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  நாமக்கல்லைச் சேர்ந்தவர் அருண். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவரும் ஒன்றாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர். அருணின் தங்கை அனிதாவிற்கு அதே பகுதியில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த விமல்ராஜூடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தையும் உள்ளது.

  murder
  அருண், நிக்கல்சன் நட்பில் நிக்கல்சனின் மனைவி ஷோபனா விஷத்தை ஊற்ற ஆரம்பித்தார். நட்பு ரீதியாக நிக்கல்சன் வீட்டிற்கு வந்து சென்றுக் கொண்டிருந்த அருண் மீது காதல் ஏற்பட்டு, இருவரும் நிக்கல்சனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலை வளர்க்க ஆரம்பித்தனர். இவர்களது தவறான பழக்கமும், நெருக்கமும் ஒருகட்டத்தில் இருவரையும் தலைமறைவாக ஓடச் செய்தது. இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியே குடித்தனம் நடந்தி வந்த நிலையில், சில நாட்கள் கழித்து தலைமறைவாக இருந்த அருணுக்கும் நிக்கல்சனுக்கும் போனிலேயே பகை வளர்ந்து வந்துள்ளது. மனைவி, நண்பனுடன் ஓடிப் போன ஆத்திரம் அதிகமாகவே, ‘நண்பன் என்று பழகி என் குடும்பத்தை சீரழித்த உன்னை பழிவாங்க உன் குடும்பத்தையே கொலை செய்கிறேன் என அருணை மிரட்டியிருக்கிறார் நிக்கல்சன். 

  murder

  அருணை போனில் மிரட்டியதைப் போலவே கடந்த திங்கட்கிழமை இரவு அனிதாவின் வீட்டிற்குச் சென்று அனிதா, அவரது கணவர் விமல்ராஜ், அனிதாவின் தந்தை கருப்பசாமி ஆகியோரை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில் அனிதாவும் விமல்ராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  கருப்பசாமி படுகாயமடைந்துள்ளார். 5 மாத பெண் குழந்தை அர்ஜிதாவை மட்டும் விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.  கொலை தொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தப்பியோடிய நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.