அணை உடைந்து தண்ணீர் புகுந்ததில் 12 பேர் பலி.. ரஷ்யாவில் நேர்ந்த சோகம்

  0
  2
  அணை

  ரஷ்யாவில் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-இற்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  ரஷ்யாவில் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-இற்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. தங்கச் சுரங்கத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட பிறகு வெளியேற்றப்படும் நீர் தேக்கி வைப்பதற்காக அதன் அருகிலேயே நீர்த் தேக்கமும் கட்டப்பட்டிருந்தது.

  russia

  இந்நிலையில் நேற்று இந்த நீர்த்தேக்கம் ஆனது திடீரென உடைந்து தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முழுவதும் சுரங்கத்தினுள் புகுந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

  நள்ளிரவு சுமார் 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிய வந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை மீட்பு பணியில் சுமார் 35க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் 200க்கு மேற்பட்ட மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

  russia

  தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால், ஊர்மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  இதனால் சேதமும் அதிக அளவிலேயே ஏற்பட்டிருக்கிறது.

  -vicky