‘அட மானங்கெட்டவனுங்களா இதுக்கு எதுக்குடா சமூக ஆர்வலர்ன்னு சொல்லிக்கிறீங்க’: பியூஷ் மனுஷ் மீது பெண் புகாரால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

  25
  பியூஷ் மனுஷ்

  அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். கடந்த ஓராண்டாக வாடகை தரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தான் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை  தராமல் இழுத்தடித்து வருவதாக  வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

  ttn

  சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சமூகம் சார்ந்த போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். குறிப்பாக இயற்கைக்கு எதிராக நாடாகும் போராட்டங்களில் இவரின் பங்கெடுப்பது முக்கியமானதாக உள்ளது. கடந்த ஆண்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்ற இவர்  காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து  செருப்பு மாலையுடன் வந்திருந்தார்.

  ttn

  அப்போது அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம்  முற்றியதையடுத்து பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர்  தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. 

  இந்நிலையில் பியூஷ் மனுஷ் மீது அவரின் வீட்டின் உரிமையாளர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தான் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை  தராமல் இழுத்தடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்பெண், பியூஸ் மானுஷ் வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று  சொன்னபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். கடந்த ஓராண்டாக வாடகை தரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த பெண் அளித்த பேட்டியின்  வீடியோவானது  இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

  இதைக்கண்ட நெட்டிசன்கள், ‘ அட மானங் கெட்டவனுங்களா இதுக்கு எதுக்குடா சமூக ஆர்வலர்ன்னு சொல்லிக்கிறீங்க’ என்று கமண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.