அட்டகாசமான மிளகு சீரக கூட்டுக்குழம்பு செய்வது எப்படி!

  0
  3
  மிளகு சீரக கூட்டுக்குழம்பு

  காலையோ இரவோ,இட்லியோ தோசையோ எந்த டிஃபன் ஆனாலும்,அதே தேங்காய் சட்னி,அதே சாம்பர், அதே காரச்சட்னி,மிஞ்சிப் போனால் இட்லி மிளகாய்ப் பொடி என்று சாப்பிட்டு சலித்துப் போனவரா நீங்கள்? இதோ, ஒரு புத்தம் புதிய பக்க வாத்தியம்,ஆனால் பக்கா வாத்தியம்.மிளகு சீரக கூட்டுக் குழம்பு நான்கு பேர் சாப்பிடக்கூடிய அளவு.

  kolambu

  தேவையான பொருட்கள்

  சின்ன வெங்காயம் 5
  மிளகு ½ ஸ்பூன்
  சீரகம் ½ ஸ்பூன்
  பூண்டு 4 பல்
  துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்
  பச்சை மிளகாய் 4
  உப்பு

  தாளிக்க

  கறிவேப்பிலை
  கடுகு
  உளுத்தம் பருப்பு
  மஞ்சள் பொடி
  உப்பு
  எண்ணைய்- ஒரு டேபிள் ஸ்பூன்

  செய்முறை

  ஒரு சிறிய மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் தவிர கொடுக்கபட்டுள்ள அனைத்தையும் சேர்த்து  மைபோல் அரைத்துக் கொள்ளுங்கள்.

  இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்,அதில் நான்கு பச்சை மிளகாய்களை நீள வாக்கில் கீறிப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்குங்கள்.அத்தோடு,மஞ்சள் தூள் சேர்துக்கொள்ளுங்கள்.

  kolambu

  இப்போது,அரைத்து வைத்துள்ள கலவையில்,ஒன்றுக்கு நான்கு  பங்கு தண்ணீர் சேர்த்து கடாயில் ஊற்றி,கைவிடாமல் ஐந்து நிமிடம் கிளறுங்கள்.இப்போது கலவை திக்காவதை பார்க்கலாம்.இந்த சமயத்தில் தேவையான உப்புச் சேர்த்து,மேலும் ஒரு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டால் மிளகு சீரக கூட்டுக் குழம்பு ரெடி!

  இதையும் படிங்க: கோடை காலத்தில் எப்பவுமே ‘ஜ்ஜில்’லுன்னு இருக்கணுமா? இந்த ஜூஸ் குடுச்சுப்பாருங்க!